தமிழகத்தில் மேலும் புதியக் கட்டுப்பாடுகள் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் புதியக் கட்டுப்பாடுகள் - தமிழக அரசு அறிவிப்பு
X

தமிழகத்தில் வருகிற 26-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு,

வழக்கமான இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை.

சலூன் கடைகள் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி இல்லை

திருமணத்தில் 50 பேர்/ இறுதிச் சடங்கில் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி

உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி. மேலும் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை

ஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி

டாக்ஸியில் மூணு பேர் ஆட்டோவில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி

பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பதிவு கட்டாயம் போன்றவை அமலுக்கு வருகிறது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் புதுக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா