மின் வெட்டு இல்லா சேவை வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை

மின் வெட்டு இல்லா சேவை வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை
X

சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்வெட்டு இல்லாத  சேவை வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் மின்வெட்டு இ்ல்லாத மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார பகிர்மான தலைமை அலுவலகத்தில் 9 மண்டல மின் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் தொடங்கும் பருவமழையின் போது சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்படும் சூழல் உருவாகும். இதனை தடுக்கும் விதமாக 9 மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் ஊரடங்கு மற்றும் கோடை காலத்தில் மின் தடை இல்லாமல் சேவை வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என அமைச்சர் கூறினார்.

Tags

Next Story
ai marketing future