தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று

தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று
X
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை அண்மையில் பதவியேற்றது. ஸ்டாலின் அமைச்சரவையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சிவசங்கர் உள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அமைச்சர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று இருப்பதை அடுத்து, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை . தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!