மியான்மார் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வருகை
மியான்மார் சிறையில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று சென்னைக்கு விமானத்தில் திரும்பினர்
ராமநாதபுரத்தை சோ்ந்தவா் மாரிமுத்து, சிவகங்கையை சோ்ந்தவா் காா்த்திக்ராஜ்,திருநெல்வேலியை சோ்ந்தவா் அருள்மலன்,தூத்துக்குடியே சோ்ந்தவா் சேக்முகமது.மீனவா்களாககிய இவா்கள் 4 பேரும் கடந்த ஏப்ரல் மாதம் மீன் பிடிக்கும் தொழிலுக்காக அந்தமான் சென்றனா். அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மீன் பிடிக்கும் வேலை செய்தனா்.
இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் விசை படகில் சென்று கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனா்.அப்போது மியான்மா் கப்பல்படையினா்,மீனவா்கள் எல்லை தாண்டிவந்து, தங்களுடைய கடல் எல்கையில் மீன் பிடித்ததாக கூறி,தமிழக மீனவா்கள் 4 பேரையும் கைது செய்தனா்.அதோடு விசைப்படகு,மீன் பிடிக்கும் வலை போன்றவைகளையும் பறிமுதல் செய்து,அவா்கள் நாட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மியான்மா் சிறையில் அடைத்தனா்.
இதற்கிடையே தமிழக மீனவா்களின் குடும்பத்தினா் மீனவா்களை மீட்கக்கோரி, தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனா்.அதன்பேரில் முதலமைச்சா் பிரதமா் மோடிக்கு மியான்மா் சிறையிலிருக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் எழுதினாா்.
அதன்பேரில் மியான்மா் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள்,மியான்மா் அரசிடம் பேசினா்.அதன்பின்பு தமிழக மீனவா்கள் 4 பேரும் கடந்த வாரம் மியான்மா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
இந்திய தூதரக அதிகாரிகள் மீனவா்கள் 4 பேரையும் டில்லிக்கு அனுப்பி வைத்தனா்.அதன்பின்பு அரசு சாா்பில் விமான டிக்கெட்கள் எடுத்து கொடுக்கப்பட்டு இன்று அதிகாலை 1.30 மணிக்கு டில்லியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் தமிழக மீனவா்கள் 4 பேரும் சென்னை வந்தனா்.
சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை வரவேற்றனா்.அதன்பின்பு தமிழக மீன்வளத்துறை ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம்,மீனவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu