தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இங்கிலாந்தில் உரையாற்றிட வருமாறு அழைப்பு
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் அமர்ஜித் சிங் சந்தித்து ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் ( House of Lords ) அரங்கில் முதலமைச்சர் உரையாற்றிட அழைப்பு விடுத்த இந்திய வணிகக் குழுவின் தலைவர் பட்டேல் அதற்கான கடிதத்தை வழங்கினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் உடன் இருந்தார்.
பென்னி குவிக் சிலை திறப்பிற்காக இங்கிலாந்து செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் அரங்கில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15 ம் தேதி தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து இலண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு. சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள். தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே பெரியாறு அணையை 1895 ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன" என தெரிவித்திருந்தார்.
சிலைக்கான பணிகள் நிறைவடைந்ததும் பென்னி குவிக் சிலை திறப்பிற்காக இங்கிலாந்து செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு வரும் நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் அமர்ஜித் சிங் சந்தித்து ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் ( House of Lords ) அரங்கில் முதலமைச்சர் உரையாற்றிட அழைப்பு விடுத்த இந்திய வணிகக் குழுவின் தலைவர் பட்டேல் அதற்கான கடிதத்தை வழங்கினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu