கே.வி.ஆனந்த் காலமானார்.
X
By - C.Pandi, Reporter |30 April 2021 9:30 AM IST
பிரபல திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் இன்று மாரடைப்பால் காலமானார்.
பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) இன்று அதிகாலை காலமானார்.
கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
'கனா கண்டேன்' படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த இவர் அயன், மாற்றான், கவன், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu