ஆபத்தான மழைநீர் வடிகால் மூடி: விழித்துக் கொள்வார்களா அதிகாரிகள்?

ஆபத்தான மழைநீர் வடிகால் மூடி: விழித்துக் கொள்வார்களா அதிகாரிகள்?
X

சென்னை வளசரவாக்கம் பகுதியில், உடைந்த மேன்ஹோல் காரணமாக, உயிர்பலி நேரிடும் அபாயம் உள்ளது. 

சென்னையில், மழைநீர் வடிகால் 'மேன் ஹோல்' சீரமைப்பில், அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்தின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் 'மேன் ஹோல்' மூடிகள் உடைத்துள்ளன. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கிய பிரதான சாலைகளில் மழைநீர் வடிகால் 'மேன் ஹோல்' மூடிகள் உடைத்துள்ளன.

இதை போல் வளசரவாக்கம், மண்டல அலுவலகத்தை ஒட்டி உள்ள 'அம்மா உணவகம்' அருகே, வடிகால் 'மேன் ஹோல்' மற்றும் காமகோடி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள வடிகால், 'மேன் ஹோல்' மேல் மூடிகளின்றி காணப்படுகிறது.

மழைநீர் வடிகால் 'மேன் ஹோல்' சீரமைப்பில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதால், உயிர் பலி அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பாக, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.நகர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!