பல்கலை வரை பெண்களுக்கு 100% இலவசக்கல்வி: திருமாவளவன் கோரிக்கை
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அல் ஷிபா கப்பிங் சிகிச்சை நிறுவனம் சார்பில் 100 பெண்களுக்கு சிறப்பு கப்பிங் சிகிச்சை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அல் ஷிபா சிகிச்சையகத்தின் நிறுவனர் மருத்துவர் பெனாசிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கட்சியின் துணைப் பொதுசெயலாளர் எழில் கரோலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்கான கல்வியை 100% இலவசமாக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் நகராட்சித் தலைவர் மாநகராட்சி தலைவர் போன்ற பதவிகளில் உள்ள பெண்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறான பதிவுகளில் இருக்கும் இடங்களில் ஆண்களின் தலையீடும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி திமுக கூட்டணியில் நகராட்சித் தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தாலும் திமுக உடனான பேச்சுவார்த்தையில் நடைமுறை சிக்கலை புரிந்துகொண்டு, நகர மன்ற துணைத் தலைவர் பொறுப்பை ஏற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி இசைவளித்து இருக்கிறது
உத்தரபிரதேசத்தில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால், ஒட்டுமொத்த தேசத்திற்கே கேடுவிளைவிக்கும் ஆபத்தாகும். கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 5 பேரையும் சேர்த்து சட்டபூர்வமாக உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu