ஆக்சிஜன் உற்பத்தி மையம்: சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் துவக்கம்..!

ஆக்சிஜன் உற்பத்தி மையம்: சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் துவக்கம்..!
X
நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்.

சென்னை : சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தினை சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் முன்னிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குனர் எஸ்.குருநாதன், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தணிகாசலம் மற்றும் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!