அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் நடத்த வேண்டும்: ஜி.கே. வாசன் வேண்டுகோள்

அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் நடத்த வேண்டும்:  ஜி.கே. வாசன் வேண்டுகோள்
X

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்

தமிழக அரசு, அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முடிவை கைவிட்டு, தொடர்ந்து நடத்த வேண்டுமென -ஜி.கே. வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :

தமிழக அரசு, அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முடிவை கைவிட்டு, தொடர்ந்து நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் ஏழை, எளிய மக்கள் நலன் காக்கும் திட்டமாகும். தமிழக அரசு, 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. காரணம் ஏழை, எளிய மக்கள் அம்மா மினி கிளினிக்குகள் மூலம் பெரும் பயனடைந்தார்கள்.

மேலும் இந்த கிளினிக்குகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரது பணியும் சிறப்பானது. அம்மா மினி கிளினிக்குகள் மூலம் மாதாந்திர மருந்துகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் அம்மா மினி கிளினிக்குகள் நடைபெறுவதில் ஏதேனும் குறை இருந்தால் அதைச் சரி செய்யலாம், தொடர்ந்து நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். அதை விடுத்து மூட முடிவெடுத்துவிட்டு, ஏதேனும் காரணங்களை கூறினால் அதை பொது மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே தமிழக அரசு, அம்மா மினி கிளினிக்குகளை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி, பொது மக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself