சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மோசடி வழக்கில் குற்றவாளி கைது: ரூ 4.5 லட்சம் பறிமுதல்

சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மோசடி வழக்கில்  குற்றவாளி கைது: ரூ 4.5 லட்சம் பறிமுதல்
X

கைதான அமிர் அர்ஷ்

சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் மோசடி வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி, ஹரியானாவில் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து, ரூ 4.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில், கடந்த 15.6.2021 முதல் 18.6.2021 வரை 14 இடங்களில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் சுமார் ரூ.45 லட்சம் பணத்தை அபகரிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர், குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதில் தொடர்புடையவரை தேடி, அரியானா சென்ற போலீசார், அமிர் அர்ஷ் என்ற குற்றவாளியை கைது செய்ததோடு, ரூ.4.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் குற்றவாளிகள் 5 குழுக்களாக சென்னையில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு ஏடிஎம் மையங்களில் பணத்தை திருடியது தெரியவந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!