உதயநிதி எம்எல்ஏவிடம் சங்கீதா ஓட்டல் உரிமையாளர் ரூ.10 லட்சம் கொரோனாநிதி

உதயநிதி எம்எல்ஏவிடம் சங்கீதா ஓட்டல் உரிமையாளர் ரூ.10 லட்சம் கொரோனாநிதி
X

உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏவிடம் சங்கீதா குரூப் ஆப் ஓட்டல்ஸ் இயக்குனர்கள் சஞ்சனா சுரேஷ், அனிருத் ராஜகோபால் ஆகியோர் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

சென்னையில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதியிடம் சங்கிதா ஓட்டல் உரிமையாளர் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சரின் வேண்டுகோளின் படி ஏராளமானோர் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரணத்துக்கு நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சங்கீதா குரூப் ஆப் ஓட்டல்ஸ் இயக்குனர்கள் சஞ்சனா சுரேஷ் , அனிருத் ராஜகோபால், பொது மேலாளர் ரகு ஆகியோர் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ₹10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்