சுற்றுலா தலங்களில் விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது : மதிவேந்தன்

சுற்றுலா தலங்களில் விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது : மதிவேந்தன்
X

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

ஓமிக்ரான் வைரஸ் காரணமாக சுற்றுலா தளங்களில் கட்டுப்பாடுகள், வழிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை போட்டோ பயன்னலே' என்கிற அமைப்பு சார்பில், புகைப்பட கண்காட்சி தொடக்க விழா, சென்னை தரமணியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, சுற்றுலாத்துறை செயலாளர் சந்திர மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை போற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை காட்சிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சி 60 நாட்களுக்கு சென்னையில் 7 இடங்களில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்த கண்காட்சியில் 14 வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 51 கலைஞர்கள் பங்கேற்று தங்களது பாரம்பரியம் மிக்க புகைப்படங்களை காட்சிக்கு வைத்துள்ளதாகவும்,

மேலும் இந்த புகைப்படங்கள் தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பெருமைகளை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளதாகவும், ஆய்வு தொடர்பான வேறு புகைப்படம் மூலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒமிக்ரான் பரவல் காரணமாக சுற்றுலா தளங்களில் அரசு ஏற்கனவே அறிவித்த கட்டுப்பாட்டு வழிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுவதாகவும், இனியும் அவை நீடிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்நிலையில் மார்கழி மாதத்தில், சென்னை சங்கமம் நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் எனவும் அமைச்சர் பேசினார்.

Tags

Next Story