பொன்முடி வழக்கு நீதித்துறை மீது நம்பிக்கை யை ஏற்படுத்தியுள்ளது: வானதிசீனிவாசன்

பொன்முடி வழக்கு நீதித்துறை மீது நம்பிக்கை யை ஏற்படுத்தியுள்ளது: வானதிசீனிவாசன்
X

வானதி சீனிவாசன் எம்எல்ஏ

பொன்முடி வழக்கு நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பொது வாழ்க்கையில் இருக்கும் அனைவருக்கும் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது 2006-11 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2011ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டிருப்பது, நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தால் பொன்முடி விடுவிக்கப் பட்டாலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பொதுவாழ்க்கையில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil