நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்
X

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

"இன்னுயிர் காப்போம்" திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்டலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சிறப்பு மருத்துவ வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 35 கோடி ரூபாய் மதிப்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சை சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயை முதல் நிலை இரண்டாம் நிலையிலே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள கேன்சர் நோயாளிகள் குறித்த பதிவேடு தயாரிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்த்திரம் உதவும். மக்களை தேடி மருத்துவம் மூலம் இதுவரை 49.79 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.மக்களை தேடி மருத்துவத்தில் 50 லட்சமாவது பயனாளியை கண்டறிந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கத்தில் முதலமைச்சர் முன்னிலையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதி நவீன உயர் ரகம் வசதிகளுடன் கூடிய 188 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

இன்னுயிர் காப்போம், "நம்மை காப்போம் 48" திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. 35 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அறுவை சிகிச்சை இயந்திரத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 5 வயது மேற்பட்டவர்கள் முக கவசம் அணிந்தால் போதுமானது. புதிதாக தொடங்கி வைக்கப்படவுள்ள. 188 ஆம்புலன்ஸ் வாகங்களில் உயிர்காக்கும் அதி நவீன உபகரணங்கள் கொண்டவை. "இன்னுயிர் காப்போம்" திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விபத்துக்கான சிகிச்சைகள் மற்றும் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனை மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிகழ்வில் மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்