/* */

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும்.

HIGHLIGHTS

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தகவல்
X

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இறுதியாண்டு மாணவர்கள் இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

தேர்வுகள் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கும் என்றும் 29ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி முதல்வர்களை அழைத்துப் பேசி சென்னை பல்கலைக்கழக கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 20,00,875 மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுகின்றனர். கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். அரியர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெறும். பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,307 மாணவர்களும், 4.51 லட்சம் பொறியியல் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12 .94 லட்சம் கலைக்கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள், ஆன்லைன் தேர்வால் 1.96 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களும் பயனடைவார்கள்' என்று கூறினார்.

Updated On: 24 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?