9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள் போராட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள் போராட்டம்
X

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்ஸ்கள். 

சென்னையில், 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நர்ஸ்கள், டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்

சென்னையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்புடன் இணைத்து தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

அந்த சங்கத்தின் மாநில தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீடு போராட்டத்தில், கொரோனா தடுப்பூசி பணிக்கு வாகனம் மற்றும் ஊக்க தொகை வழங்க வேண்டும்; கொரோனா தடுப்பூசிப் பணிக்கு ஓய்வு பெற்ற மற்றும் பயிற்சி முடித்த செவிலியர்களை பயன்படுத்த வேண்டும்; கொரோனா தடுப்பூசி பதிவு கணக்கெடுப்பிற்கு பிற துறையினரைப் பயன்படுத்த வேண்டும்; முகாம்களில், மாலை 5 மணிக்குள் தடுப்பூசி பணி மற்றும் பெண் உதவியாளர் நியமனம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500ற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுருத்தி சுகாதார துறைக்கு எதிராக கண்டன முழக்கங்ளை எழுப்பினர். செவிலியர்களிடம் மாலை வரையிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்த வித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததால், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை டி.எம்.எஸ் வளாகத்திலேயே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!