புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில், மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ வாகனங்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளில் ஒன்றாக மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பார்வை குறைபாடு 1.9 சதவிகிதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் 1.8% ஆக உள்ளது. இது தேசிய அளவை விட குறைவு என்றாலும் இதனையும் குறைக்க இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை மக்கள் முக கவசம் அணிவதை 100% உறுதி செய்ய வேண்டும்.அனைத்து இடங்களிலும் வீட்டை விட்டு வெளியே வந்தால் 100% முக கவசம் அணிந்து மற்ற ஊர்களுக்கு சென்னை மக்கள் முன்னோடியாக இருக்க வேண்டும். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால் கண்காணிக்கப்படும்.
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய நட்சத்திர விடுதகளில் இதுவரை புத்தாண்டு கொண்டாட்ட குறித்து அறிவிப்புகள் வராமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான 34 பேரில் 12 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. 118 பேரின் மாதிரிகள் முடிவுகள் வந்த பின்னரே உறுதியாக எத்தனை பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என தெரியவரும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu