14 வது மெகா தடுப்பூசி முகாமை துவங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பரமணியன்
சென்னை டி. நகரில் மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதார துறை சார்பில் சென்னை தி.நகரில் 14 வது மெகா கோவிட் தடுப்பூசி மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் குடும்ப நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பரமணியன் துவங்கி வைத்தார்இந்த நிகழ்வில் தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது.
கொரோனா தொற்றிற்கான தடுப்பூசி செலுத்தும் பணி மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருவதாகவும் 14 வது தடுப்பூசி முகாம் சென்னையில் 1600 இடங்களில் நடைபெறுகின்றது என தெரிவித்தார்
இதுவரை கொரோனா நோய்தொற்று தடுப்பூசி 7 கோடி 54 லட்சத்து 2698 பேர் செலுத்தியுள்ளனர். 2வது தவணை தடுப்பூசி 48.95% பேர் செலுத்தியுள்ளனர் மேலும் 81.30% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்தார்
13 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 2.43 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் எனவும்,13 மெகா தடுப்பூசி முகாம் மூலம் சென்னையில் மட்டும் 19 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
2 வது தவணை தடுப்பூசி தவணை காலம் முடிந்தும் 94.15 லட்சம் பேர் செலுத்தாமல் உள்ளதாகவும் சென்னை பல்கலைகழகம், அண்ணா பல்கலைகழகம்,எம்.ஜி.ஆர் பல்கலைகழகம், ஐ.ஐ.டி ஆகிய கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் ஆலோசனை நடைபெற்றது எனவும் அதில் 18 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்தார்
அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து வந்த 9819 பேரில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறைந்த பாதிப்பு கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்களில் 43938 பேரில் தோராயமாக 1303 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
அதிக மற்றும் குறைந்த பாதிப்பு கொண்ட நாடுகளில் இருந்த வந்த நபர்களில் 18 பேருக்கு டெல்டா வகை கொரோனா மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது அதனை பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu