ஏழைகளுக்கு கல்வி கிடைக்கச் செய்த பெருந்தலைவர்: முதல்வர் மு.க ஸ்டாலின் புகழாரம்

ஏழைகளுக்கு கல்வி கிடைக்கச் செய்த பெருந்தலைவர்: முதல்வர் மு.க ஸ்டாலின் புகழாரம்
X

பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க ஸ்டாலின்.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் புகழாரம்

சென்னை: பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று! ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிட்டிடச் செய்த பெருந்தலைவர்! அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் கழக அரசு என்றென்றும் காமராஜரின் நினைவைப் போற்றும்! என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!