தேநீர் கடைகளை திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் - முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் வேண்டுகோள்

தேநீர் கடைகளை திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் - முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் வேண்டுகோள்
X

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில் தேநீர் கடைகளை திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் ஊரடங்கில் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டு உடலுக்கு உற்சாகமளிக்கும் தேநீர் கடைகளை திறக்க அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது.

கொரோனா கால ஊரடங்கில் தேநீர் கடை உரிமையாளர்கள், அவர்களை சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் பால் உற்பத்தியாளர்கள் என பல லட்சம் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை இன்னும் முடக்குவது தமிழக அரசுக்கு அழகல்ல.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தேநீர் கடைகளை திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story