சென்னை விமானநிலையத்தில் தங்கம் கடத்தல் : 4 பெண்கள் கைது

சென்னை விமானநிலையத்தில் தங்கம் கடத்தல் : 4 பெண்கள் கைது
X
சென்னை விமான நிலையத்தில் பெண்கள் கடத்தி  வந்த தங்கம்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 4 பெண்களை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

துபாய்,இலங்கை நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ஆடைகளுக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்த ரூ.57 லட்சம் மதிப்புடைய 1.19 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு 4 பெண் பயணிகளை சுங்கத்துறை கைது செய்தனர்.

துபாயிலிருந்து ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த 3 பெண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவா்களை நிறுத்தி விசாரணை நடத்தினா்.

அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.இதையடுத்து பெண்சுங்கத்துறையினா்,3 பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா்.அந்த பெண்களின் உள்ளாடைகளுக்குள் 6 சிறிய பாா்சல்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.அதனுள் தங்க பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது.763 கிராம் தங்க பசையை பறிமுதல் செய்து 3 பெண்களையும் கைது செய்தனா்.

இதையடுத்து இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சோதனையிட்டனா்.அப்போது ஆந்திரா மாநிலத்தை சோ்ந்த ஒரு பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை சோதனையிட்டபோது,அவருடைய உள்ளாடைக்குள் தங்க வளையல்கள்,மற்றும் தங்க பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.429 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

துபாய்,இலங்கையிலிருந்து அடுத்தடுத்து வந்த 2 விமானங்களில் 4 பெண் பயணிகளிடம் மொத்தம் ரூ.57 லட்சம் மதிப்புடைய 1.19 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு,4 பெண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!