தமிழகத்தில் முதல் மரபணு ஆய்வகம் இன்று திறப்பு
இந்தியாவில் கொரானா வைரஸ் உருமாற்றத்தை கண்டறிய 10 ஆய்வகங்கள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் ஒரு ஆய்வகம் கூட இல்லை. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கண்டறிய மாதிரிகள், பெங்களூரு அல்லது புனே ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஏற்படுவதால், தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் அடுத்த நிலைக்கு சென்று விடுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், ரூ. 4 கோடி மதிப்பில் மரபணு ஆய்வகம் அமைக்கப்பட இருக்கிறது. பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய ஆய்வகத்தை இயக்குவதற்காக, ஆறு பேர் குழுவினர் பெங்களூரில் சிறப்பு பயிற்சியை முடித்துள்ளனர்.
இவர்களுடன் பணிபுரிய மேலும் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான சோதனை ஓட்டம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, மரபணு ஆய்வகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu