/* */

சென்னை: 2 முக்கிய சாலைகளை இணைக்கும் புதிய மேம்பாலப்பணிகள் துவக்கம்

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை, அண்ணா சாலையை இணைக்கும் ரூ.70 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன.

HIGHLIGHTS

சென்னை: 2 முக்கிய சாலைகளை இணைக்கும் புதிய மேம்பாலப்பணிகள் துவக்கம்
X

சென்னையில்,  இரண்டு முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் கட்டப்படும் புதிய மேம்பாலம். 

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, ஓட்டேரி கொன்னுார் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில், 335 கோடி ரூபாய் செலவில், மேம்பாலங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது. மதிப்பீடு தயாரித்து, 2021 - 22 சட்டசபை நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தி.நகர், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பு வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், சிவ விஷ்ணு கோவில் அருகே, மேம்பாலத்தில் இருந்து, தி.நகர் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்லவும், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே, பஸ் நிலையத்தில் இருந்து மேம்பாலத்தில் பஸ்கள் ஏறவும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த மேம்பால பணிகளுக்கான இடத்தை, இரண்டு மாதங்களில் சர்வே செய்து, திட்டமதிப்பீடு தயாரிக்கும் பொறுப்பை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேம்பாலங்கள் இணைப்பு தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தி.மு.க., ஆட்சியில், 2008ல், 9.72 கோடி ரூபாய் மதிப்பில், வடக்கு உஸ்மான் சாலை - மகாலிங்கபுரம் சாலை சந்திப்பிலும், 19.80 கோடி ரூபாய் மதிப்பில், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பிலும், இரு மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலத்தையும், நுங்கம்பாக்கத்தில் இருந்து தி.நகர் நோக்கி வரும் மகாலிங்கபுரம் மேம்பாலத்தையும் இணைக்க, 2014ல் மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் மேம்பாலங்கள், தலா, 600 மீட்டர் நீளம் உடையவை. இவற்றுக்கு இடையே, 1 கி.மீ., துாரம் உள்ளது. இதில் உஸ்மான் சாலை மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை தகர்த்து, அந்த மேம்பாலத்தை, மகாலிங்கபுரம் மேம்பாலம் வரை நீட்டிக்க, மண் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் பல்வேறு காரணங்களால், இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து, மாநகராட்சி மேம்பாலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு உஸ்மான் சாலையில் அமைய உள்ள மேம்பாலத்தால், தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். சாலைகளில் வாகனப் போக்குவரத்தை குறைத்து, தி.நகரை பாதசாரிகளுக்கான இடமாக மாற்றுவது தான், நீண்ட கால திட்டம். உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் மேம்பாலங்கள் இணைப்பு திட்டத்தில், நிலம் கையகப்படுத்த அதிக பண செலவு ஏற்படும். பிற்காலத்தில் தேவைப்பட்டால், இந்த இரு மேம்பாலங்களும் இணைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 5 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...