சமூக ஊடகங்களில் காங்கிரஸ் தலைவர்களை இழிவு செய்பவர்களை கண்டுபிடிக்க கே.எஸ்.அழகிரி உத்தரவு
பைல் படம்
சமூக ஊடகங்களில் காங்கிரஸ் தலைவர்களை இழிவாகப் பதிவு செய்பவர்களை கண்டுபிடியுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்ட தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர். தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.
கட்சியின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படுகிற முடிவுகளை ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியினரும் சபதமாக ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமைமிக்க இயக்கமாக மாற்ற வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் மீது சமூக ஊடகங்களில் இழிவாகப் பதிவு செய்பவர்களை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்.
மீனவர்களுக்கு எதிரான இந்த கறுப்புச் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் பா.ஜ.க. அரசுக்கு கண்டிப்பு. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உபா சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது இதனை ரத்து செய்ய வேண்டும் உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu