இம்மானுவேல் சேகரன் 64ம் ஆண்டு நினைவு தினம், திருமா மாலை அணிவிப்பு

இம்மானுவேல் சேகரன் 64ம் ஆண்டு நினைவு தினம், திருமா மாலை அணிவிப்பு
X

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி தொல் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இம்மானுவலே் சேகரன் 64ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சென்னை அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் மறைந்த இம்மானுவேல் சேகரின் 64 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் பட்டது.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது கூறியதாவது: ஆதிதிராவிட பழங்குடி நலத்துறை ஆணையம் உருவாக்கியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இந்த ஆணையத்தின் தலைவர் நியமிப்பதில்

ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது அதில் சிக்கல் இருக்கிறது எனவும் தலித் சமூகம் அல்லாத ஒருவரை நியமிக்க வேண்டும

புதிய ஆளுநர் நியமிப்பில் காங்கிரஸ் கட்சியின் ஐய்யம் சரியானது. உளவுத்துறையோடு சுலபமான உறவு உள்ள ஒருவரை தமிழக ஆளுநராக வேண்டுமென்றே ஒன்றிய அரசு நியமித்துள்ளது,

ஜனநாயக பூர்வமாக செயல்படக் கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும். யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் ஆட்சியை கலைத்து விடும் தெம்பும், திராணியும் கிடையாது.

சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்புக்குறியது. பெண்களுக்கு எதிராக நடக்க கூடிய பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும், இதற்கென தனி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

மத்திய அரசு பெண்களை பாதுகாக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட நிர்பயா என்கிற சட்டம் இன்னும் செயல்படவில்லை. மேலும் இரண்டு வருடங்களில் தமிழகத்தில் போதை பழக்கம் இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் இதற்கு தனி கவனம் செலுத்தி இதற்கென்று தனி பிரிவினை உருவாக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!