வாக்களித்த பின்னர் சசிகலா அளித்த பேட்டியில் கூறியது என்ன தெரியுமா?

வாக்களித்த பின்னர் சசிகலா அளித்த பேட்டியில் கூறியது என்ன தெரியுமா?
X

ஜெயலலிதாவுடன் சசிகலா (பழைய படம்).

சென்னையில் வாக்களித்த பின்னர் சசிகலா அளித்த பேட்டியில் தி.மு.க. அரசு மீது குற்றம் சாட்டினார்.

நேற்றுசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 113 வது வார்டு தியாகராய நகரில் அமைந்துள்ள வித்யோதயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வி.கே.சசிகலா தனது வாக்கினை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்

இதுவரை அக்காவுடன் (ஜெயலலிதா) சேர்ந்து தான் வாக்கு அளித்து இருக்கிறேன், அதை மனதில் நினைத்துக்கொண்டே வந்தேன். இந்த முறை தான் நான் தனியாக வந்துள்ளேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இது தமிழக அரசு நடத்தும் தேர்தல் அதை வைத்து ஆளுங்கட்சி அராஜகம் செய்யக்கூடாது என்ற அவர், தமிழக அரசும், காவல்துறையினரும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தேர்தலுக்கு எல்லா வசதிகளும் செய்தால் மட்டும் போதாது நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என உருக்கமாக கண்ணீர் மல்க வி. கே. சசிகலா தெரிவித்தார்.

Tags

Next Story