தி.நகர் ரங்கநாதன் தெரு உட்பட முக்கிய சாலையை மூட மாநகராட்சி உத்தரவு

சென்னை டி.நகர் ரெங்கநாதன் தெரு பைல் படம்
சென்னையில் கொரானா தொற்று பரவுவதை தடுக்க தி.நகர் ரங்கநாதன் தெரு உட்பட முக்கிய சாலையை மூட சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா தொற்று பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால்,
முன்னதாக அனுமதிக்கப்பட்ட அனைத்தும் வழக்கம் போல் தொடரும் எனவும் கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி நாளை முதல் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி காலை 6 மணி வரையில் ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முடிவு எடுத்து கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த சில மணி நேரங்களில் சென்னை மாநகராட்சி நகரின் முக்கிய சாலைகளை முட உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட உத்தரவு: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தி.நகர் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு,
புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை,
அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும்
ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் என முக்கிய சாலைகள், கொத்தவால் சாவடி மார்கெட் வருகிற 9ம் தேதி வரையில் செயல்பட அனுமதியில்லை என்று இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu