/* */

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாட்டம்

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாட்டம்
X

தொல் திருமாவளவன் பைல் படம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறித்தவ சமூகநீதி பேரவை சார்பில் ஒருங்கிணைக்கும் சமூகநீதி சமூகங்களின் கிறிஸ்து பிறப்பு பெருவிழா சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சாலையில் உள்ள பிஷப் மாணிக்கம் அரங்கில் நடைபெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் விஜிபி சந்தோசம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி வாழ்த்தை பகிர்ந்து கொண்டனர்.

தொல்.திருமாவளவன் மேடை பேச்சு: இன்று திசம்பர்-18 உலக சிறுபான்மையினர் உரிமை நாள், இந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது.

இனி ஆண்டுதோறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 18ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமை நாளை முன்னிறுத்தி விழா நடத்தப்படும்

கௌதம புத்தர்,இயேசு பெருமான், நபிகள் நாயகம் போன்ற மாமனிதர்களின் பிறப்பு ஆளும் வர்க்கத்தினருக்கு அச்சத்தைத் தந்தது. இயேசு பெருமானின் பொதுவாழ்வு மூன்று ஆண்டுகள் தான். அவரின் மூன்றாண்டு கால பொதுவாழ்க்கையை பல நூறு ஆண்டுகள் கடந்தும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம் என்றால் இந்த சமூகத்திற்கு அவர் எவ்வளவு அளப்பரிய பங்களிப்பை தந்திருக்கிறார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்

அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் என்பது தான் கிறித்தவம் நமக்குச் சொல்லுகின்ற செய்தி சிறுபான்மையினரின் பாதுகாப்போடு சேர்ந்த ஜனநாயக கட்டமைப்பை உருவாக்க புரட்சியாளர் அம்பேத்கர் போராடினார்

வாக்கு வங்கி அரசியலாக பார்ப்பது சராசரி அரசியல்வாதிகளின் பார்வை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி புரட்சியாளர் அம்பேத்கரையும் இயேசு பெருமானையும் சமத்துவம் என்ற கோட்பாட்டில் ஒன்றாக பார்க்கிறது

மனிதன் என்ற அடிப்படையில் அனைவரையும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் விடுதலை சிறுத்தைகளின் அரசியல் கிறிஸ்துவம் அந்நிய மதம் அல்ல, அது சமத்துவத்திற்கான தத்துவம

மத வெறுப்பு இங்கு அரசியல் ஆதாயத்திற்காக தூண்டப்படுகிறது, அந்த மத வெறுப்பு அரசியலை தான் விடுதலை சிறுத்தைகள் அம்பலப்படுத்தி வருகிறது

அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிபடுத்த வேண்டும் என்பதற்காக மத வெறுப்பு அரசியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. சிறுபான்மையினர் நலன் காக்கும் களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றென்றும் ஜனநாயக சக்திகளோடு கைகோர்த்து நிற்கும் இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 18 Dec 2021 5:39 PM GMT

Related News