தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 10 தலைமை பொறியாளர்கள் பணியிட மாற்றம்

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 10 தலைமை பொறியாளர்கள் பணியிட மாற்றம்
X
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 10 தலைமை பொறியாளர்களை பணியிடம் மாற்றம் செய்து முதன்மை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 10 தலைமை பொறியாளர்களை பணியிடம் மாற்றம் செய்து முதன்மை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,

* தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 தலைமை பொறியாளர் குமார் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனராகவும்,

* தேசிய நெடுஞ்சாலை அலகு தலைமை பொறியாளர் சந்திரசேகர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளராகவும்,

* சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்ட தலைமை பொறியாளர் பாலமுருகன் தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளராகவும்,

* நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கீதா நபார்டு மற்றும் கிராம சாலைகள் தலைமை பொறியாளராகவும்,

* சென்னை பெருநகர தலைமை பொறியாளர் சுமதி திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு தலைமை பொறியாளராகவும்,

* நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கோதண்டராமன் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனராகவும்,

* கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சாந்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 தலைமை பொறியாளராகவும்,

* நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு தலைமை பொறியாளர் செல்வன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலைகள் தலைமை பொறியாளராகவும்,

* நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கோதண்டராமன் சென்னை பெருநகர தலைமை பொறியாளராகவும்,

* திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு தலைமை பொறியாளர் விஜயா தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன பொது மேலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!