சென்னை கே.கே.நகர் ஆசிரியர்மீது பாலியல் புகார்: போலீசார் தீவிர விசாரணை

சென்னை கே.கே.நகர் ஆசிரியர்மீது பாலியல் புகார்:  போலீசார் தீவிர விசாரணை
X

சென்னை கே.கே.நகரிலுள்ள தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பள்ளியில், வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ராஜாகோபாலன் . இவர் ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் ராஜகோபாலன் பற்றிய விவரங்களை சென்னை - கே.கே.நகர் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் தலைமையில் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்.

இதனிடையே, ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து சென்னை பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகத்திடம் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது நேர்மையான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ' பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து பிஎஸ்பிபி பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும், ஆசிரியர் ராஜகோபலன் மீதான புகாரில் உண்மையிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா