மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சுத்தம் செய்யும் பணி : அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சுத்தம் செய்யும் பணி : அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு
X

அமைச்சர் ராஜகண்ணப்பன். (அருகில்)மாற்றுத்திறனாளிகள்  மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கட்டணமில்லா டிக்கட்.

மாநகர் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் சுத்தம் செய்யும் பணியை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.

மாநகர் போக்குவரத்து மத்திய பணிமனையில் இயக்கப்படுகின்ற மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் உரிய முறையில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்ற பணியினை போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் இன்று (21/06/2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் (திருநங்கைகள்) ஆகியோர் கட்டணம் இல்லாமல் பயணிக்க ஏதுவாக வழங்கப்பட உள்ள கட்டணமில்லா பயணசீட்டை காண்பித்தார்கள்.

இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தயானந்த் கட்டாரியா மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் திரு.அ.அன்பு ஆபிரகாம் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் திரு.ஜோசப் டையஸ் மற்றும் போக்குவரத்து தலைவர் அலுவலக தனி அலுவலர் திரு. பி.திருவாம்பலம் பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!