சென்னையில் 2500 பஸ்களில் சிசிடிவி கேமிரா: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னையில் 2500 பஸ்களில் சிசிடிவி கேமிரா: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் (பைல் படம்)
சென்னையில் முதற் கட்டமாக 2500 பஸ்களில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமிர பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜா கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 12 தேதி முதல் தற்போது வரை அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்ச மகளிர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணபன் தெரிவித்துள்ளார்.

12-ஆம் தேதி முதல் பயணம் செய்யும் பெண்களுக்கு டிகெட் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்த பயணம் செய்பவர்களில் 56% பெண்கள் எனவும் நேற்று மட்டும் 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.

நாள் ஒன்றுக்கு 28லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். அதிகமாக பெண்களே பயணம் செய்கின்றனர் திருநெல்வேலியில் 68% பெண்களே பேருந்துகளில் பயணம் செய்கின்றனர் என்று கூறினார்.

மேலும் தற்போது வரை 5,741 திருநங்கைகள் இலவசமாக பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், 51,615 மாற்று திறனாளிகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் 8,396 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது எனவும், பல ஆண்டுகளாக பேருந்து இல்லாமல் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி பகுதியில் முதலமைச்சர் ஆணைக்கு இணங்க நேற்று முதல் பேருந்து இயக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்

லாபத்திற்காக இயக்கப்படுவது அல்ல பேருந்துகள். பொதுமக்களுக்காகவே இயக்கப்படுகிறது. டீசல் விலை அதிகமாக இருந்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் தான் டிக்கெட் விலையை குறைவாக விற்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டீசல் விலை அதிகரிப்பதால் டிக்கெட் விலையை அதிகரிக்க முடியாது என கூறிய அவர், தற்போது மொத்தம் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அதில் பெண்களுக்காக 7,291 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். மேலும் பெண்கள் அதிகம் வர வர பேருந்துகள் அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

பள்ளி வாகனங்களை பொறுத்தவரை FC பண்ணவேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். டாக்ஸ் கட்டுவதுதில் கால நீட்டிப்பு தொடர்பாக ஆலோசித்து தான் சொல்ல முடியும் என்று அவர் கூறினார்.

குறிப்பாக நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் சிசிடிவிகேமிரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியது குறிப்பிட தக்கது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா