முன்னாள் அமைச்சர் உதவியாளருக்கு முன் ஜாமீன்

முன்னாள் அமைச்சர் உதவியாளருக்கு முன் ஜாமீன்
X

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் நடிகை சாந்தினி.

திருமணம் செய்வதாக ஏமாற்றிய நடிகை அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட வழக்கில் அவரின் உதவியாளர் பரணிதரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : திருமணம் செய்வதாக ஏமற்றிய நடிகை அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட வழக்கில் அவரின் உதவியாளர் பரணிதரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயப்படுத்தி கரு கலைப்பு செய்ததாகவும் மலேசியாவை சேர்ந்த நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர் பரணிதரன் ஆகியோருக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கடந்த 20 ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மணிகண்டன் உதவியாளர் பரணிதரன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தாம் எந்த குற்றம் செய்யவில்லை எனவும் எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. எனவே முன் ஜாமின் வழங்க மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை மனுதரார் வெளியிட்டுள்ளார். எனவே முன் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தார். அப்போது நீதிபதி, மனுதாரர் புகார் அளித்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் பதில் மனுவில் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் இல்லை. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மந்தப்பட்ட புகார் அளித்த பெண்ணை அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளதாக முதல் தகவல் அறக்கையில் உள்ளது. மற்ற எந்த குற்றச்சாட்டும் இவர் மீது இல்லை. அதற்கான ஆதாரம் இல்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி தண்டபாணி, மனுதரார் பரணிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டு அடிப்படை முகாந்திரத்திற்கு ஆதாரம் இல்லை. முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் புகார் அளித்த மலேசிய பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார். மற்ற குற்றச்சாட்டு இல்லை. எனவே இந்த வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்