/* */

கல்வி நிறுவனங்களில் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் : அமைச்சர் நாசர் அறிவிப்பு

தமிழகத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கல்வி நிறுவனங்களில் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் :  அமைச்சர் நாசர் அறிவிப்பு
X

சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் துறை ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசுகிறார். 

சென்னை: தமிழகத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் துறை ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசியதாவது, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் மாத விற்பனை, 400 கோடி ரூபாய். 10 லட்சம் லிட்டர் பால், பால் பவுடர் மற்றும் வெண்ணையாக உருமாற்றம் செய்யப்படுகிறது. பாக்கெட் பால் விற்பனை, தினசரி, 26 லட்சம் லிட்டராகவும், உதிரிப்பால் விற்பனை, நான்கு லட்சம் லிட்டராகவும் உள்ளது.

பாலில் வைட்டமின் 'ஏ' மற்றும் 'டி' நுண்ணுாட்டங்களை செறிவூட்டவும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும், ஆவின் பால் விற்பனை நிலையங்கள் அமைத்து, விற்பனையை அதிகரிக்கவும், பால் உற்பத்தியாளர்களுக்காக மாதந்தோறும் குறை தீர்வு கூட்டம் நடத்தவும், பணிகள் நடந்து வருகின்றன.மேலும், பாலாடைக்கட்டி, திரட்டுப்பால், இளங்குழந்தைகளுக்கு பால் பவுடர், இனிப்பு இல்லாத பால்கோவா போன்ற புதிய பால் பொருட்கள் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும், பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமானால், விவசாயிகள் உற்பத்தி செய்யும், அனைத்து பாலையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய இயலும். ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 July 2021 6:23 AM GMT

Related News