ஆவின் முறைகேடுகள் : ஊழல் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

ஆவின் முறைகேடுகள் : ஊழல் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை
X

ஆவின் பால்

ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும், ஆவின் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பாக ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

சென்னை : ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும், ஆவின் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பாக ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமிக்கு கோரிக்கை வைத்தனர்.


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் கூட்டுறவு சங்க விதிகளை மீறி கடந்த அதிமுக ஆட்சியில் இடைத்தரகர்களாக நியமனம் செய்யப்பட்ட C/F ஏஜென்ட் (சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்) எனும் இடைத்தரகர்கள் முறையை ரத்து செய்து உத்தரவிட்டு, ஆண்டுக்கு சுமார் 18கோடி ரூபாய் வரை ஏற்பட்ட இழப்பை தடுத்து நிறுத்தியதற்கும், கடந்த அதிமுக ஆட்சியில் ஆவினில் 236பணியிடங்களில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டமைக்கும் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமியை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தலைமையில், மாநில பொருளாளர் முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.குமார், மாநில கூடுதல் பொதுச்செயலாளர் ஆனந்தன், மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.வெங்கடேசபெருமாள் ஆகியோர் சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் இன்று நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அத்துடன் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் பால் விற்பனை உயர வேண்டுமானால் பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்பு கொடுத்து, ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை சதவிகித அடிப்படையில் நிர்ணயம் செய்து அதனை 12% ஆக வழங்கிட வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை அதிகப்படுத்த Multi Brand பால் முகவர்களையும் ஆவினோடு நேரடி தொடர்பில் கொண்டு வர வேண்டும் எனவும்,

கடந்த 10ஆண்டுகளில் ஆவினில் நியமனம் செய்யப்பட்ட பணியிடங்கள் குறித்தும், கோவை ஒன்றியத்தில் பால் பண்ணை விரிவாக்கத்திற்காக இயந்திர தளவாடங்கள் வாங்கியதிலும், ஆவின் நிறுவனத்தில் உபரியாகும் பாலினை பவுடராக மாற்றிட கடந்த 2019ம் ஆண்டு விதிமுறைகளை மீறி டெண்டர் விடப்பட்டதில் பலகோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் அது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைத்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாக இயக்குனர் கந்தசாமி ஆவினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும், அதற்கு உங்களையும் அழைப்பேன் அப்போது உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் என கூறியதோடு எங்களது கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!