சென்னை விமான நிலையத்தில் 3.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது : 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் 3.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது : 2 பேர் கைது
X

சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.

சென்னை விமானநிலையத்தில் 1.59 கோடி மதிப்புள்ள 3.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாா்ஜாவிலிருந்து ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சிவகங்கையை சோ்ந்த 2 ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவா்களை நிறுத்தி சுங்கத்துறையினா் விசாரணை நடத்தினா்.அதன்பின்பு அவா்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா்.அவா்கள் இருவரின் உள்ளாடைகளுக்குள் 7 பாா்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்து எடுத்தனா்.

அந்த பாா்சல்களில் 1.5 கிலோ தங்கப்பசை உருண்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.அதன் சா்வதேச மதிப்பு ரூ.71.72 லட்சம்.இதையடுத்து தங்கப்பசை உருண்டைகளை பறிமுதல் செய்து,கடத்தல் பயணிகள் இருவரையும் கைது செய்தனா்.அவா்களிடம் மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

இதற்கிடையே சென்னை சா்வதேச விமானநிலையத்தின் வருகை பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் மா்ம ஒரு பாா்சல் கிடந்ததை விமானநிலைய தூய்மை பணியாளா்கள் பாா்த்துவிட்டு,மேலாளருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடக்டா் மற்றும் மோப்ப நாயுடன் வந்து மா்ம பாா்சலை ஆய்வு செய்தனா்.அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து பாா்சலை பாதுகாப்பு அதிகாரிகள் பிரித்து பாா்த்தனா்.அதனுள் சில்வா் பேப்பா் பாா்சலில் தங்கப்பசை மறைத்து வைத்திருத்ததை கண்டுப்பிடித்தனா்.அதனுள் 1.8 கிலோ தங்கப்பசை இருந்ததை கைப்பற்றி,சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.87.82 லட்சம்.இதையடுத்து சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா், இந்த தங்கப்பசை பாா்சல் துபாயிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என்று சுங்கத்துறையினா் கூறுகின்றனா்.விமானநிலைய சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்கின்றனா்.

சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து 2 சம்பவங்களில் ரூ.1.59 கோடி மதிப்புடைய 3.3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல் பயணிகள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!