சென்னை தீபாவளி பாதுகாப்பு பணியில் 1200 தீயணைப்பு விரர்கள்

சென்னை தீபாவளி பாதுகாப்பு பணியில் 1200 தீயணைப்பு விரர்கள்
X

சென்னை ரங்கநாதன் தெருவில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்த தீயணைப்புத்துறை இணை இயக்குனர் ப்ரியா ரவிச்சந்திரன்.

சென்னை தீபாவளி பாதுகாப்பு பணியில் 1200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடப்போவதாக இணை இயக்குனர் ப்ரியா ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையின் போது விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது குறிப்பது தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவில் துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தீயணைப்பு துறை இணை இயக்குனர் ப்ரியா ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கினார். தீபாவளியின் போது பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிக்க வேண்டுமென கார்ட்டூன் படங்களுடன் விழிப்புணர்வு வாசகங்கள் துண்டறிக்கையில் இடம் பெற்றுள்ளன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இணை இயக்குனர் ப்ரியா ரவிச்சந்திரன்,

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

தீபாவளியன்று சென்னையில் விபத்து ஏற்பட்டால் 2 முதல் 3 நிமிடங்களில் சென்றடையும் வகையில் தீயணைப்பு துறை சார்பில் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், சென்னையில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் தவிர 66 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயாராக உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 1200 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுவதாகவும் தீயணைப்பு துறை இணை இயக்குனர் ப்ரியா ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!