ஆவின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்போம் -நிர்வாக இயக்குநர் கந்தசாமி ஐஏஎஸ் உறுதி
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில், மாநில பொதுச்செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் எஸ்.முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.குமார், மாநில அமைப்புச் செயலாளர்எஸ்.தாழமுத்து, மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.வெங்கடேசபெருமாள் ஆகியோர் ஆவின் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுள்ள கந்தசாமி ஐஏஎஸ் அவர்களை சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் நேரில் சந்தித்து புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள 25ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் நிலவி வரும் மாறுபாடான ஆவின் பால் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை குறித்த புள்ளி விபரங்களோடு, பால் முகவர்களின் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி தமிழகம் முழுவதும் சதவிகித அடிப்படையில் குறைந்தபட்சம் 14% ஆக ஒரே அளவில் வழங்க வேண்டும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையையும் ஒரே அளவில் நிர்ணயம் செய்து, CF, WSD போன்ற இடைத்தரகர்கள் முறையை ஒழித்து பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்புகளை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
கோரிக்கை மனு குறித்து அவர்கள் கூறியதாவது:
அத்துடன் கடந்த 10ஆண்டுகளாக ஆவின் பால் 25லட்சம் லிட்டருக்கு மேல் விற்பனை அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன..? என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேறும்பட்சத்தில் அது மூன்று மடங்கு அதாவது சுமார் 75லட்சம் லிட்டர் வரை உயர்த்திட முடியும் என்பதையும் தெரிவித்தோம்.
எங்களது மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாக இயக்குனர் திரு. கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் ஆவினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அது தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். அத்துடன் எங்களது கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu