அதிமுக மகளிர் அணி செயலாளராக வளர்மதி நியமனம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக மகளிர் அணி செயலாளராக வளர்மதி நியமனம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
X

அதிமுக மகளிர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி

அதிமுக மகளிர் அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்

இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் வளர்மதி, கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் ஆகியோர், அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

மகளிர் அணி செயலாளராக, முன்னாள் அமைச்சர் வளர்மதியும் இணை செயலாளராக மரகதம் குமரவேல் நியமிக்கப்பட்டார். இலக்கிய அணி செயலாளராக முனைவர் வைகைச்செல்வன், வர்த்தக அணி நிர்வாகி செயலாளராக வெங்கட்ராமன், இணை செயலாளராக, ஆனந்தராஜா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!