காவல்துறை தலைவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

காவல்துறை தலைவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!
X

சமூக வலைதளங்களில் மருத்துவ உதவி கேற்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. விசாரணையில் சமூக வலைத்தளங்களில் மருத்துவ உதவி கேட்கும் பொதுமக்கள் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதை மீறினால் காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் தடுப்பூசிக்கான விலையை நிறுவனங்கள் முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. தடுப்பூசி விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!