முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே தீக்குளித்தவரால் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகே தீக்குளித்தவரால் பரபரப்பு
X
சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டருகே, ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு உள்ளது. இன்று காலை, முதலமைச்சரின் இல்லத்தின் முன்வந்த ஒருவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீயை பற்றவைத்துள்ளார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, அந்த நபரை மீட்டனர்.

எனினும், அந்த நபருக்கு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை, சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை முயன்றவர், தென்காசியை சார்ந்த வெற்றிவேல் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் வீட்டருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!