கொரோனா வார்டாக மாறும் மாணவர் விடுதிகள்: பாதிப்பின் உச்சத்தில் சென்னை..!

கொரோனா வார்டாக மாறும் மாணவர் விடுதிகள்: பாதிப்பின் உச்சத்தில் சென்னை..!
X

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவிவரும் நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி மாணவர் விடுதியை 250 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. அந்த வகையில், மாணவர் விடுதியை சுத்தப்படுத்தி, கொரோனா நோயாளிகள் தங்கும் வார்டாக மாற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நோயாளிகள் சிகிச்சைக்கு ஏற்ற மாதிரி அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!