சென்னையில் கல்லூரி மாணவர் திடீர் மரணம்: பரோட்டா சாப்பிட்டதுதான் காரணமா?

சென்னையில் கல்லூரி மாணவர் திடீர் மரணம்: பரோட்டா சாப்பிட்டதுதான் காரணமா?
X
சென்னையில், பரோட்டா சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கிய கல்லூரி மாணவர், திடீரென மரணம் அடைந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் விவி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அரியகுட்டி. இவரது மகன் சிபி சங்கமித்ரன். இவர், அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு, ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். நேற்றிரவு கடையில் புரோட்டா சாப்பிட்டு விட்டு, 10 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.

இன்று அதிகாலையில் சிபி சங்மித்ரனுக்கு திடீரெ மூச்சு திணறல் ஏற்பட்டது. பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்தனர். பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தனியார் வாகனத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிபி சங்கமித்ரன் உடலை கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை செய்வதற்காக உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரோட்டோ சாப்பிட்டதால் தான் கல்லூரி மாணவன் சிபி சங்கமித்ரன் இறந்து போனாரா என்பது தொடர்பாக, பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!