சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு
X
சென்னை திரு.வி.க. நகரில், பதினொன்றாம் வகுப்பு மாணவர் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை திரு.வி.க.நகர், எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசித்து வருபவர் சத்யேந்தன். இவரது மூத்த மகன் நிர்மல், தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர், அதிகாலையில் சேத்துப்பட்டில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்திற்கு செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் இருந்த நிலைதடுமாறி, தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாணவரை, கீழே இருந்த டிரைவர் மீட்டு, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்