ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : ஜூலை 31 வரை மட்டுமே அனுமதி - உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : ஜூலை 31 வரை மட்டுமே அனுமதி - உச்சநீதிமன்றம்
X
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வரும் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுத்து, 5 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், நிலைமையை பொறுத்து ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் இயக்க வேண்டுமா? என்பது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், அந்த ஐந்து நிபுணர்களை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது. அந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா