கண் கவர் சிலையாக மாறிய பயனற்ற இரும்பு பொருட்கள்

கண் கவர் சிலையாக மாறிய பயனற்ற இரும்பு பொருட்கள்

இரும்பு பொருட்களை கொண்டு உருவான சிலை

சென்னை நகர சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள ஐ.சி.எப்.ல் மீதமான இரும்பு பொருட்களை கொண்டு செய்யப்பட்ட சிலைகள் காண்போரை கவர்ந்து வருகிறது

ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையான சென்னை, ஐ.சி.எப்., 1955ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தாய்லாந்து, பர்மா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு, இங்கிருந்து ரயில் பெட்டிகள் தயாரித்து அனுப்பப்படுகிறது.

இங்கு தற்போது, ரயில் பெட்டிகள் தயாரிப்பின் போது மீதமாகும் இரும்பு பொருட்களைக் கொண்டு, காண்போரின் கண்களைக் கவரும் வகையில் சிலைகள் வடிக்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளாக பல்வேறு இரும்பு சிலைகள் செய்யப்பட்டு, சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் சிறப்பம்சமாக, ஒரு தலைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது, காண்போரின் கண்களை மட்டும் அல்ல, மனதையும் கொள்ளையடிக்கும்படி அமைந்து உள்ளன. குறிப்பாக கலையரசி, பேரரசர், வளர்ச்சி பயணம் என்பன போன்ற தலைப்புகளில், நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள சிலைகள், சென்னை நகரை அழகுபடுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..

Tags

Next Story