5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்.!

5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்.!
X

தமிழக முதல்வராக பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஐந்து கோப்புகளில் மு.க ஸ்டாலின் கையெழுத்தித்திட்டார்.அவை பின்வருமாறு,

தமிழகத்தில் சுமார் 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் முதல் கட்டமாக ரூ. 2000 வழங்கப்படும்.

நாளை முதல் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.

மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும்.

100 நாட்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி இலாகா அமைக்கப்பட்டு "உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்" செயல்படுத்தப்படும். என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.முதல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி கையெழுத்திட்டார் முக ஸ்டாலின்.

Tags

Next Story
the future of ai in healthcare