முதல்வராகிறார் ஸ்டாலின் ராஜினாமா செய்தார் பழனிச்சாமி..! டிவிட்டரில் வாழ்த்து

முதல்வராகிறார் ஸ்டாலின் ராஜினாமா செய்தார் பழனிச்சாமி..! டிவிட்டரில் வாழ்த்து
X

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.

தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று ராஜினாமா செய்துள்ளது. சேலத்தில் இருந்தபடியே தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இடம் பெறாமல் இருந்த நிலையில் தற்போது முக ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்