ஏப்ரல் 17 முதல்மதுரை-சென்னை அதிவேக சிறப்பு ரயில்

ஏப்ரல் 17 முதல்மதுரை-சென்னை அதிவேக சிறப்பு ரயில்
X
கொரானா காரணமாக நிறுத்தப்பட்ட மதுரை-சென்னை அதிவேக சிறப்பு ரயில் ஏப்ரல் 17 முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கிறது

தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் விரைவாக செல்லும் வகையில் சென்னை-மதுரை இடையே அதிவேக ரயில் இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று காரணமாக ரயில் சேவைகளை ரயில்வே நிர்வாகம் குறைத்தது. முன்பதிவு அல்லாத டிக்கெட் பயணத்திற்கு அனுமதியில்லை என்றாலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

வாரம் 2 முறை இயங்கும் மதுரை- சென்னை அதிவேக சிறப்பு ரயில் வருகிற ஏப்ரல் 17ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும். மதுரையில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் எழும்பூருக்கு காலை 6.55 மணிக்கு வந்தடையும்.எழும்பூரில் இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதுரைக்கு காலை 8.10க்கு சென்றடையும். செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!